கிழக்கு முனையம் Vs பொத்துவில் முதல் பொலிகண்டிவரை

peoplenews lka

கிழக்கு முனையம் Vs பொத்துவில் முதல் பொலிகண்டிவரை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விடையத்தில் சீனா மாஸ் காட்டியது. இதானால் இந்தியா இலவு காத்த கிளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இன்று கிழக்கு முனையம் அல்ல மேற்கு முனையம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சீனாவின் மாஸுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என இந்தியா தன்னுடைய பங்கிற்கு பொத்துவில் முதல் பொலிகண்டிவரை என்ற தமிழ் பேசும் மக்களின் எழுச்சியில் பின்னணியில் இருந்து மாஸ் காட்டியுள்ளது.

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை அபிவிருத்திசெய்வதற்கான உடன்படிக்கை கடந்த அரசாங்கத்திற்கும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது. இதன் அடிப்படையில் கிழக்கு முனையத்தின் 49% பங்கினை இந்தியா மற்றும் ஜப்பானுக்கிடையில் பகிரப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையினூடாக துறைமுகத்தின் கிழக்கு முனையப் பகுதி மேலும் ஆழப்படுத்தப்பட்டு மீள்கட்டமைக்கப்படும்.

ஆனால் 2019 November இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்காரணமாக இந்த உடன்படிக்கை மீது மிகப்பாரிய அழுத்தங்கள் பிரையோகிக்கப்பட்டுவந்தன.இந்தப் பின்னணியில் சீனாவின் திருவிளையாடல் காரணமாக இந்த அராசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளின் எதிர்ப்பு நாடகங்கள் சிறப்பாக அரங்கேறின.இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இலங்கையுடன் இந்த பிரச்சனை தொடர்பாக செய்யப்பட்ட உயர்மட்ட கலந்துரையாடல்களும் கருத்தற்றுப் போயின.இறுதியில் இலங்கையில் இருக்கும் சீனாவின் விஸ்வரூபத்தினை இந்தியாவும் ஜப்பானும் ஏன் அமரிக்கா கூட இந்த அறிந்துகொண்டன.

கிழக்கு முனையம் கிடையாது வேண்டும் என்றால் மேற்கு முனையத்தினை எடுத்து முற்றாக மீள் அமைத்துக்கொள்ளுங்கள் என்ற அதி உச்ச முடிவினை இலங்கை அராசாங்கம்  அறிவித்தது. அதுவும் மேற்கு முனையத்தில் 85% வரை வழங்க முடியும் என்ற தகவலையும் தெரியப்படுத்தியது இலங்கை. கிழக்கு முனையத்தில் 49% கேட்டால் இப்பொழுது மேற்கு முனையத்தில் 85% தரமுடியும் என்கிறார்களே என்று வாயடைத்துள்ளது இந்தியா.

 

மேற்கு முனையத்தினை முழுமையாக அமைக்க வேண்டும் என்றால் 5 ஆண்டுகளுக்கு அதிக காலம் தேவைப்படும். ஆழம் தொடர்பான பிரச்சனைகளும் உள்ளன. கடல் போக்குவரத்து எல்லை தொடர்பான சிக்கல்களும் இந்தியாவிற்கு மேற்கு முனை விடயத்தில் உள்ளன. மாஸ் காட்டிய சீனாவிற்கு இதுவும் பழம் நழுவி பாலுக்குள் விழுந்தது போல் தான் அமைந்தது. ஏனெனில் ஒரு வேளை இந்த கோரிக்கையை இந்தியாவும் ஜப்பானும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அந்த 85% தானே கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு போட சீனா ஆரம்பித்துவிட்டது.

இதற்கு மேலாக இலங்கை இந்தியாவிடம் அன்னியசெலாவணி பரிவர்த்தனைக்காக வாங்கிய 400 மில்லியன் டொலர்களையும் உரிய காலத்திற்கு முதலிலேயே திருப்பி கொடுத்துவிட்டது.மேலும் இலங்கைக்கு 1500 மில்லியன் டொலர்களை February மாதம் இறுதியில் அன்னிய செலவாணி பரிவர்த்தனைக்காக கடனாக (இந்தியா or சீனா) வழங்குகின்றது. இலங்கையில் சீனாவின் இந்த பிரமாண்டத்தினால் இந்தியா சற்றே தடுமாறித்தான் போனது. 

சீனாவின் இந்த விஸ்வருவத்தினை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில் இந்தியா தன் கையில் உள்ள அதே பழைய ஆயுதத்தை தூசி தட்டி எடுக்க ஆரம்பித்துள்ளது. சீனாவின் இந்த பிரமாண்ட பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றால் இலங்கையில் பெருபான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையில் பிரச்சனைகளை சற்று தட்டிவிடுவது தான் சாலச்சிறப்பு.ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை சபையிலும் அமரிகாவின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள், அதற்கு மேற்குலக நாடுகளின் அனுசரணைகள், தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தினை இன்றைய அரசாங்கம் வேற்று நாட்டாவர் போன்ற நடாத்தும் போக்கு, ஜனாதிபதியின் பௌத்த சிங்கள அதிகார கோசங்கள் என பல்வேறு நிகழ்வுகளை தனக்கு சார்பாக இந்தியா கையில் எடுத்துள்ளது போன்றே தோன்றுகின்றது.

 அந்த வகையில் தான் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடை போராட்டம் இந்தியாவின் விஸ்வரூப செயற்பாட்டின் ஒரு வடிவமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதை இலங்கை முன்கூட்டியே அறிந்துவிட்டது. தங்கள் மேல் உள்ள அதீத நம்பிக்கையாலும் தமிழ் பேசும் சமூகம் இப்படி பற்பல போராட்டங்களை நடாத்தி களைத்துவிட்டபடியால் இதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றும் சற்றே இறுமாப்புடன் தான் இந்த அரசாங்கம் இருந்துவிட்டது.

 அப்படி அங்கும் இங்குமாக சற்று அதிகமாக தலை தூக்கினால் கொரோனாவை பயன்படுத்தலாம் என்ற எண்ணமும் அரசாங்கத்திடம் இருந்துள்ளது என்றே கூறலாம்.ஆனால் இந்த அரசாங்கத்தின் கணக்கு இன்று தப்பாகி உள்ளது. சர்வதேசங்களை காலத்தற்கு காலம் தங்கள் கணக்குகளுக்கு ஏற்பப் சுத்தவிடும் திறமை உடையவை இலங்கை அரசாங்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழர்களுடைய விடயத்தில் அவர்கள் போடும் கணக்குகள் தவறியே போகின்றன. அதற்கு பொத்துவில் முதல் பொலிகண்டிவரை போராட்டமும் விதிவிலக்கல்ல. 

இந்தியாவின் பின்புலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இறுதியில் வழமைபோல் தமிழ் மக்கள் தங்களுடைய விஸ்வரூபத்தினை காட்டத்தவறவில்லை என்றே தெரிகின்றது. எத்தனை போராட்டங்கள் வந்தாலும் நாங்கள் சளைக்க மாட்டோம் என்ற வாதத்தை மீண்டும் தமிழ் மக்கள் நிலை நாட்டியுள்ளார்கள். இந்த போராட்டம் இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒரே கோட்டில் தமிழ் பேசும் சமூகமாக மீண்டும் பயணிக்க பிள்ளையார் சுழியாகவே அமைந்துள்ளதாக புலப்படுகின்றது. 

இந்த மாற்றத்தினை இந்த அரசாங்கம் சற்றும் எதிர்பார்கவில்லைத் தான். ஆகவே எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குள் எதிர்கருத்துகள் பல திடீர் திடீர் என தோன்றுவதை எதிர்பார்க்கலாம். எது எப்படியோ இந்தியாவும் இதனூடாக தன்பங்குக்கு மாஸ் காட்டித்தான் உள்ளது...

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது...

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு.. Read More

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்....

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்... Read More

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!...

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன... Read More